Learn road traffic law

Learn road traffic law


1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine

சொத்து சம்மந்தமான பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :


சொத்து சம்மந்தமான பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா அல்லது சிவில் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டுமா??
காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பது அல்லது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது பிரச்சனைகளை பொறுத்து மாறுபடும். உதாரணமாக பிரச்சனைகளின் கிரிமினல் குற்றச் செயல் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது உரிமை கோருதல், பாகம் பிரித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் :

தனியாக உள்ளன தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும்.

வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.
இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்.

இது சம்ப்ந்தமாக புகார் கொடுக்கலாம்:
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரி

அரசு அதிகாரிகள் பொய் வழக்குக்கு உடந்தையாக இருந்தால்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :


அரசு அதிகாரிகள் பொய் வழக்குக்கு உடந்தையாக இருந்தால் என்ன செய்வது??

நீதிமன்றத்தில் பொய் வழக்கு என நீரூபித்துவிட்டு அந்த வழக்கு தொடர உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூறி நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரலாம். மேலும் அவர்கள் மீது நஷ்ட ஈடு வழக்கும் தொடர முடியும்.

Human Right

Human Right




























எந்த அடிப்படையில் குற்றவாளிகளுக்கு சட்டத்தால் தண்டனை வழங்கப்படுகிறது??

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
எந்த அடிப்படையில் குற்றவாளிகளுக்கு சட்டத்தால் தண்டனை வழங்கப்படுகிறது??
நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை வழங்கிய பின்னரே அவரை குற்றவாளி எனக் கூற வேண்டும். அதுவரை அவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுவதே நீதிமன்றத்தின் மரபு. சட்டத்தின் பார்வையில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னால் அக்குற்றத்திற்கு உண்டான சாட்சி மற்றும் குற்றம் செய்தவரின் நேக்கம் மற்றும் யாரால் அல்லது யாருடைய தூண்டுதலின் பேரால் மற்றும் யாரை, எந்த சூழ்நிலையில் அக்குற்றச் செயல் நடைபெற்றது என்பதனையும் அக்குற்ற செயலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் அக்குற்றச் செயலினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை மற்றும் குற்றம் செய்தவரின் வயது, பாலினம் மற்றும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடராமல் இருக்க வேண்டி போன்றவற்றை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்படும்.

மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
 மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986


எங்கள் ஏறியா அரசியல்வாதி சரியாக எந்த வேலையும் எங்கள் ஏறியாவிற்கு செய்யவில்லை. இதுபோன்ற அரசியல்வாதிகளை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளதா???
பொதுவான அரசியல்வாதிகளை தண்டிக்க சட்டத்திலும் இடம் இல்லை ஆனால் மக்கள் பிரதிநிதியாக உள்ள அரசியல்வாதிகளின் பணியில் ஏதாவது குறைபாடு இருந்தால், பாதிக்கப்பட்ட மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 -ன் படி சம்மந்தப்பட்ட மக்கள் பிரதிநிதியாக உள்ள அரசியல்வாதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

மனித உரிமை பாதுகாப்பு சட்டம்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
மனித உரிமை பாதுகாப்பு சட்டம்

மூன்று வருடத்திற்க்கு முன்பு ஒரு பொய்யான வழக்குற்காக காவல் துறையினர் எனது தந்தையை எங்கள் வீட்டிற்கு வந்து கைது செய்து வீதியில் இழுத்து சென்றார்கள். இதனால் எங்கலுக்கு மிகவும் அவமானம் ஆகிவிட்டது. அப்போது நாங்கள் காவல் துறையினரை பார்த்து பயந்துவிட்டோம். இதுபோன்ற அவமானம் விளைவிற்கும் கைது நடவடிக்கைகலுக்கு நாங்கள் மனித உரிமை ஆனையத்தில் வழக்கு தொடர முடியுமா???
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் – 1993 பிரிவு 36-(2) ன் படி உங்கலுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நீங்கள் மனித உரிமை ஆனையத்தில் வழக்கு தொடர முடியும். ஆனால் சம்பவம் நடந்த ஒருவருட காலத்திற்குல் வழக்கு பதிவு செய்து இருக்க வேன்டும். தவரும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யால் நிராகரிக்கப்படும்.

குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 320-ன்

என் மீது எனது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் கிரிமினல் புகார் குடுத்ததால் என்னை கைது செய்தானர். மேலும் போலீஸ்சார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டனர். தற்பொழுது இருவரும் சமதானம் ஆகிவிட்டோம். எனவே நீதிமன்றத்தில் என் மீது உள்ள வழக்கை எனது பக்கத்து வீட்டுக்காரர் வாபஸ் பெற முடியுமா???
உங்கள் மீது குடுத்த புகார் சமாதானமாக போகக்குடிய வழக்காக இருந்தால், குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 320-ன் கீழ் வழக்கை சமரசம் என்று வாபஸ் பெற முடியும்.

உயில்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

உயில்

எங்கள் தாத்தா எங்கலுக்கு சொத்தை உயில் மூலமாக எழுதி வைத்துவிட்டார். இதன் காரனமாக எங்கள் பெரியப்பா அவரது செல்வாக்கை பயன்படுத்தி சட்டத்தை கையில் எடுத்து கொண்டு எங்களை கூலிபடையினர் மூலமாக கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். இது சம்பந்தமாக நாங்கள் போலிசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் இது சவில் சம்பந்தமான வழக்கு என்று எங்கள் புகாரை வாங்க மருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எங்களை சட்டத்தின் மூலமாக எப்படி காப்பாத்திக்கொள்வது???
சட்டப்படி உங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் போலிசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உங்கள் பெரியப்பா அத்து மீறினால், நீங்கள் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 482-ன் கீழ் மனுத்தாக்கல் செய்தால் உங்கள் மாவட்ட காவல் துறை தலைமை அதிகாரிக்கு நீதிமன்றம் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

முறைபடி விவாகரத்து

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

 முறைபடி விவாகரத்து


நானும் எனது மனைவியும் ஏழு வருடமாக பிறிந்து வாழ்கிறோம். எங்கள் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. இப்பொழுது இருவரும் சம்மதத்துடன் பிறிந்து அவரவர் விருப்பம் போல வேறு வாழ்க்கை அமைத்து கொள்ள விரும்புகிறோம். இதற்காக நாங்கள் நூறு ருபாய் பத்திரத்தில் இருவரும் சம்மத்துடம் பிரிவதாக எழுதி அதை நோட்டரி வாங்கி வைத்துக் கொன்டால் அது சட்டப்படி இருவரும் பிறிந்ததாக கருத முடியுமா???
நீங்கள் குடும்பவியல் நடைமுறை சட்டப் படி உறிய நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து முறைபடி விவாகரத்து பெற வேண்டும். அதுவே முறைப்படி பிறிந்ததாக கருதப்படும். பத்திரத்தில் எழுதி பிரிவது சட்டப்படி செல்லாது. நோட்டரி என்பது ஒரு அத்தாட்ச்சியாக மட்டுமே கருதப்படும். அது நீதி மன்ற ஆனையாக கருதப்படாது.

பெண்கள் மற்றும் மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் :

அறிந்து கொள்வோம் : பெண்கள் மற்றும் மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் :

=> திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பச் செய்து பெண்ணுடன் உறவு வைத்து பின்னர் ஏமாற்றினால் IPC – 493 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினால் IPC – 503 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணை திருமணத்திற்காகவோ அல்லது வேறொரு குற்றமுறு உட்கருத்துடன் கடத்திச் சென்றால் IPC – 366 பிரிவின் படி குற்றமாகும்.
=> கட்டாயத்தின் பேரில் அல்லது குற்றமுறு உட்கருத்துடன் திருமணம் அல்லது திருமணச் சடங்கு செய்தால் IPC – 496 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணின் இசைவின்றி அல்லது விருப்பத்திற்கு மாறாக உறவு வைத்துக் கொண்டால் IPC – 375 பிரிவின் படி குற்றமாகும்.
=> திருமணமான பெண்ணை உட்கருத்துடன் கட்த்திச் செல்லுதல் அல்லது வைத்திருத்தால் IPC – 498 பிரிவின் படி குற்றமாகும்.
=> அடுத்தவர் மனைவியுடன் அல்லது வேறொரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால் IPC – 497 பிரிவின் படி குற்றமாகும்.
=> கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போதே மீண்டும் திருமணம் செய்து கொண்டால் IPC – 494 பிரிவின் படி குற்றமாகும்.
=> ஏற்கனவே திருமணம் ஆன விசயத்தை மறைத்து இன்னொரு திருமணம் செய்து கொண்டால் IPC – 495 பிரிவின் படி குற்றமாகும்.
=> கணவர் அல்லது கணவரின் குடும்பத்தார் கொடுமைப் படுத்தினால் IPC – 498-அ பிரிவின் படி குற்றமாகும்.
=> மனைவி அல்லது பெண்ணின் இசைவின்றி கருவை சிதைத்தால் IPC – 313 பிரிவின் படி குற்றமாகும்.
=> ஒரு பெண்ணுக்கு மாற்று செய்கையின் மூலமாக தானாகவே கருவை சிதைக்கச் செய்தால் IPC – 314 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணுக்கு குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தால் IPC – 315 பிரிவின் படி குற்றமாகும்.

கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல்

அறிந்துகொள்வோம் : இந்திய தண்டனை சட்டங்கள்:

கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-
பிரிவு 498அ : கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல்.
=> பெண்ணை தற்கொலை செய்ய தூண்டுதல்
=> பெண்ணின் உயிர் மற்றும் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் (உடலியல் & மனலியல்) கொடுங்காயம் எற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்.
=> சொத்தினை அல்லது விலைமதிப்புள்ள பொருளை பெறுவதற்கு பெண்ணை சித்ரவதை செய்தல் அல்லது கொடுக்க மறுத்த பெண்ணை சித்ரவதை செய்தல்.
தண்டனை : 3 வருடம் வரை சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
வரதட்சனை மரணம் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-
பிரிவு 304ஆ : வரதட்சனை மரணம் :
பெண் ஒருவர் திருமணமான 7 ஆண்டுகளுக்குள் கணவன் அல்லது அவரது உறவினர்களால் வரதட்சனை கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு தீக்காயங்கள் அல்லது உடற்காயங்கள் அல்லது சாதாரண சூழ்நிலையில் அல்லது வேறு காரணங்களினால் இறந்திருக்கும் போது அது வரதட்சனை மரணம் என அழைக்கப்படும். அத்தகைய மரணத்தை இறந்த பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் ஏற்படுத்தியதாக கொள்ளப்படும்.
தண்டனை : குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையும் பெறுவர்

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும். அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்:
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

இந்திய தண்டனை சட்டங்கள்

அறிந்துகொள்வோம் : இந்திய தண்டனை சட்டங்கள்
மணவாழ்க்கை சம்மந்தமான குற்றங்கள் மற்றும் தண்டனைகள் :-
பிரிவு 494 : கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போதே மீண்டும் திருமணம் செய்து கொள்ளல் :
தண்டனை : 7 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
பிரிவு 495 : எவருடன் பிந்திய திருமணம் செய்து கொள்கிறாரோ அவரிடம் முந்தைய திருமணம் பற்றி மறைத்துச் செய்யப்படும் அதே குற்றம் :
தண்டனை : 10 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
பிரிவு 493 : சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக நம்புமாறு வஞ்சனையாகத் தூண்டி ஆடவரால் விளைவிக்கப்பட்ட மானபங்கம் :
தண்டனை : 10 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date)

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?

காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"
அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் மாவட்டாட்சியரிடம் ஆன் லைனில் மனுக் கொடுக்க

உங்கள் மாவட்டாட்சியரிடம் ஆன் லைனில் மனுக் கொடுக்க

 இங்கு http://onlinegdp.tn.nic.in/ கிளிக் செய்யவும்.

http://onlinegdp.tn.nic.in/

பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இரண்டற கலந்த ஒன்று. உண்மையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பொது மக்களின் குறை தீர்ப்பு என்பது ஒரு மாவட்ட நிர்வாகத்தின் திறமையான செயல்பாடுகளை அளந்து நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக கருதப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு புள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வையும் எளிதாக்குகிறது .

http://onlinegdp.tn.nic.in/

மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்கிறது. கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.

கருவை சிதைவித்தல் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-

அறிந்துகொள்வோம் : கருவை சிதைவித்தல் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-
பிரிவு 312 : கருவைச் சிதைவித்தல் :
கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்குக் கருசிதைவை, அப்பெண்ணின் உயிரைக் காக்கும் பொருட்டு, நல்லெண்ணத்துடன், அத்தகைய கருச்சிதைவு விளைவிக்கப் படாதிருக்குமானால் தன்னிச்சையாக விளைவிக்கும் எவராயினும் தண்டிக்கப்படுவர். தானே கருசிதைவை விளைவித்துக் கொள்ளும் பெண்ணும் இப்பிரிவில் அடங்குவர்.
தண்டனை : 3 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்
பிரிவு 313 : பெண்ணின் இசைவின்றி கருவைச் சிதைவித்தல் :
பெண்ணின் இசைவின்றி அந்தப்பெண் கருவியக்க நிலையில் இருந்தாலும் இராவிட்டாலும் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்குக் கருசிதைவை, அப்பெண்ணின் உயிரைக் காக்கும் பொருட்டு, நல்லெண்ணத்துடன், அத்தகைய கருச்சிதைவு விளைவிக்கப் படாதிருக்குமானால் தன்னிச்சையாக விளைவிக்கும் எவராயினும் தண்டிக்கப்படுவர்.
தண்டனை : ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்
பிரிவு 314 : கருசிதைவு விளைவிக்கும் உட்கருத்துடன் செய்யப்பட்ட செய்கையால் விளைவிக்கப்பட்ட மரணம்:
கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்குக் கருசிதைவை விளைவிக்கும் உட்கருத்துடன், அந்தப் பெண்ணின் மரணத்தை விளைவிக்கிற செய்கை எதையும் செய்கிற எவராயினும் தண்டிக்கப்படுவர்.
தண்டனை : 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்

பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

தேர்தலில் நோட்டாவிற்கு அதிக வாக்கு பதிவானால் என்ன நடக்கும்???.

நோட்டாவுக்கு 35% க்கும் மோல் வாக்கு பதிவாகி இருந்தால் அந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது ...

அதன் பின்னர் ஆறு மாத காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும் .....

அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் முந்தய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் மீண்டும் போட்டியிட முடியாது......

பதிவு திருமணம் செய்து கொள்ளும் முறை

அறிந்து கொள்வோம் : பதிவு திருமணம் செய்து கொள்ளும் முறை :
இந்திய திருமண சட்டப்பிரிவின் படி பதிவு திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மேலும் நல்ல மனநிலையும் இருக்க வேண்டும்.
கோவிள்களில் திருமணம் செய்து பின்னர் பதிவு செய்ய விரும்புவேர் முதலில் அரசால் அங்கிகரிக்கப்பட்ட அல்லது அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் பதிவு செய்து திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு கோவில் நிர்வாகம் சம்பத்தப்பட்டவரிடம் வயது சான்றிதழ், குடும்ப அட்டை நகல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் கடிதம் சமர்பிக்க வேண்டும். அதன் பின்பு கோவில் நிர்வாகம் திருமணத்தை அனுமதித்து அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின்பு கோவில் திருமணச் சான்றிதழ் உடன் திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண போட்டோ, மணமக்களின் போட்டோ உடன் தலா இரண்டு சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.
திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால், திருமண மண்டபத்தின் ரசீது, கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் சான்றிதழ், திருமண போட்டோ, மணமக்களின் போட்டோ, அவர்களின் வயது சான்றிதழுடன் தலா இரண்டு சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.
சினிமாவில் பார்பது போன்று நேரடியாக சார் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய முடியாது. மேலும் முறையற்ற முறையில் கோவில்களில் திருமணச் சடங்கு செய்து கொண்டாலோ அல்லது காவல் நிலையத்தில் திருமணச் சடங்கு நடைபெற்றாலோ அது சட்டப்படி திருமணமாக கருத முடியாது.

பிறப்பு சான்றிதழின் முக்கிய்த்துவம்

அறிந்து கொள்வோம் : பிறப்பு சான்றிதழின் முக்கிய்த்துவம் :
எவரொருவர் 1985 ஆம் ஆண்டிற்கு பின்பு பிறந்தவராக இருக்கும் நிலையில், அவருக்கு பிறப்புச் சான்றிதழ் பல்வேறு அரசு துறைகள் சார்ந்த வேலைபாட்டிற்கு முக்கிய சான்றிதழாக தேவைப்படுகிறது. உதாரணமாக பாஸ்போட் விண்ணப்பித்தல், அரசு வேலையில் சேருதல் மற்றும் பல..,
இச்சூழ்நிலையில் பிறப்புச் சான்றிதழின் குறிப்பிட்டுல்ல பிறந்த தேதியும் அவரது கல்விச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் இணையாக இருத்தல் வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் அவரவர் குடியிருப்பு வரையறைக்கு உட்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். வருவாய்த்துறை அலுவலர் பதிவேட்டில் குறிப்பிட்ட தேதியில் உங்களது பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றால் நீங்கள் வழக்கறிஞர் உதவியுடன் நீதி மன்றத்தினை அணுகி பிறப்பு சான்றிதழ் வழங்க உத்திறவு தரும்படி ஆணை பெற்று வருவாய்த் துறை அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

ஆபாசச் செயல்பாடுகள் செய்தல் மற்றும் பரப்புதல்

அறிந்து கொள்வோம்: ஆபாசச் செயல்பாடுகள் செய்தல் மற்றும் பரப்புதல் :

எவரொருவர் தனிப்பட்ட நபருக்கோ அல்லது பொதுவாகவோ ஆபாசம் எனக் கருதக்கூடிய வகையில் இருக்கும் ஒலியை எழுப்புதல் அல்லது படங்களை பரப்புதல் அல்லது அதுபோன்ற பொருட்களை பொது இடத்தில் கையாலுதல் மற்றும் பரப்பும் செயல்கலை செய்தால் அது கீழ்காணும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய நேரிடும்.
IPC – 292: ஆபாசப்பொருட்களை விற்பனை செய்தல்
IPC – 293: இளைஞர்களுக்கு ஆபாசப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பரப்புதல்
IPC – 294: ஆபாசச் செயல்களும் மற்றும் பாடல்களும்
மேலும் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு குறிப்பட்ட இதைத்தாரையோ ஆபாசமாக காண்பித்தல் அல்லது பேசுதல் அல்லது அச்சிட்டு வெளியிடுதல் அல்லது இணையத்தின் மூலம் பரப்புதல் ஆகியவையும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய நேரிடும்.
தனிமனித சுதந்திரம் அனைத்தும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதே தவிர அடுத்தவரை காயப்படுத்தல் அல்லது இழிவு படுத்துதல் செயல்களைச் செய்வதற்கு அல்ல.

காசோலை உபயோகித்தல்

அறிந்து கொள்வோம்: காசோலை உபயோகித்தல் :
ஒருவர் தனிப்பட்ட முறையிலோ அல்லது நிறுவனமோ மற்றொருவருக்கு காசோலை வழங்கும் போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். ஏனென்றால் காசோலை பணமாகாமல் வங்கியினரால் திருப்பி அனுப்பினால் அது கிரிமினல் குற்றமாக கருதி உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும்.
எந்த சூழ்நிலையிலும் காசோலையில் பெயர் எழுதாமலோ, தேதி குறிப்பிடாமலோ அல்லது தொகை எழுதாமலோ வழங்குதல் கூடாது. ஏனென்றால் காசோலை பெருபவர் அதை எவ்வாறு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அவ்வாறு தவறாக உபயோகப்படுத்தும் போது காசோலையில் குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் நீங்கள் பொருப்பாவிர்கள்.
கடன் பெருபவர்கள் காசோலையை பினையமாக கொடுக்கும் தருணத்தில் காசோலை பற்றிய முழு விபரத்தினையும் அதை உபயோகிக்கும் முறையையும் மற்றும் தொகையின் உச்சவரம்பு ஆகியவற்றினையும் தொகுத்து காசோலை பெருபவரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறுதல் அவசியம். ஆனால் பெரும்பாலானவர்கள் இம்முறையினை பின்பற்றுவதில்லை.
பணத்தின் தேவை மற்றும் அவசரம் கருதி காசோலையின் பெறுப்பு பற்றிய முழு விபரமும் தெரியாமல் கொடுத்து விடுகின்றனர். பணத்தை திரும்பப் பெரும் பொருட்டு மற்றும் அதிக வட்டி வசூல் செய்யும் பொருட்டு ஒரு சில தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிக தொகையினை காசோலையில் எழுதி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
காசோலையை வழங்கிவிட்டு பின்னர் முன் அறிவிப்பின்றி உரிய காரணம் இன்றி காசோலை வங்கியனரால் நிறுத்தம் செய்ததும் குற்றமாக கருதப்படும்.
எனவே காசோலை உபயோகிக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.