ஆபாசச் செயல்பாடுகள் செய்தல் மற்றும் பரப்புதல்

அறிந்து கொள்வோம்: ஆபாசச் செயல்பாடுகள் செய்தல் மற்றும் பரப்புதல் :

எவரொருவர் தனிப்பட்ட நபருக்கோ அல்லது பொதுவாகவோ ஆபாசம் எனக் கருதக்கூடிய வகையில் இருக்கும் ஒலியை எழுப்புதல் அல்லது படங்களை பரப்புதல் அல்லது அதுபோன்ற பொருட்களை பொது இடத்தில் கையாலுதல் மற்றும் பரப்பும் செயல்கலை செய்தால் அது கீழ்காணும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய நேரிடும்.
IPC – 292: ஆபாசப்பொருட்களை விற்பனை செய்தல்
IPC – 293: இளைஞர்களுக்கு ஆபாசப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பரப்புதல்
IPC – 294: ஆபாசச் செயல்களும் மற்றும் பாடல்களும்
மேலும் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு குறிப்பட்ட இதைத்தாரையோ ஆபாசமாக காண்பித்தல் அல்லது பேசுதல் அல்லது அச்சிட்டு வெளியிடுதல் அல்லது இணையத்தின் மூலம் பரப்புதல் ஆகியவையும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய நேரிடும்.
தனிமனித சுதந்திரம் அனைத்தும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதே தவிர அடுத்தவரை காயப்படுத்தல் அல்லது இழிவு படுத்துதல் செயல்களைச் செய்வதற்கு அல்ல.