இந்திய தண்டனை சட்டங்கள்

அறிந்துகொள்வோம் : இந்திய தண்டனை சட்டங்கள்
மணவாழ்க்கை சம்மந்தமான குற்றங்கள் மற்றும் தண்டனைகள் :-
பிரிவு 494 : கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போதே மீண்டும் திருமணம் செய்து கொள்ளல் :
தண்டனை : 7 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
பிரிவு 495 : எவருடன் பிந்திய திருமணம் செய்து கொள்கிறாரோ அவரிடம் முந்தைய திருமணம் பற்றி மறைத்துச் செய்யப்படும் அதே குற்றம் :
தண்டனை : 10 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
பிரிவு 493 : சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக நம்புமாறு வஞ்சனையாகத் தூண்டி ஆடவரால் விளைவிக்கப்பட்ட மானபங்கம் :
தண்டனை : 10 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.