பெண்கள் மற்றும் மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் :

அறிந்து கொள்வோம் : பெண்கள் மற்றும் மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் :

=> திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பச் செய்து பெண்ணுடன் உறவு வைத்து பின்னர் ஏமாற்றினால் IPC – 493 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டினால் IPC – 503 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணை திருமணத்திற்காகவோ அல்லது வேறொரு குற்றமுறு உட்கருத்துடன் கடத்திச் சென்றால் IPC – 366 பிரிவின் படி குற்றமாகும்.
=> கட்டாயத்தின் பேரில் அல்லது குற்றமுறு உட்கருத்துடன் திருமணம் அல்லது திருமணச் சடங்கு செய்தால் IPC – 496 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணின் இசைவின்றி அல்லது விருப்பத்திற்கு மாறாக உறவு வைத்துக் கொண்டால் IPC – 375 பிரிவின் படி குற்றமாகும்.
=> திருமணமான பெண்ணை உட்கருத்துடன் கட்த்திச் செல்லுதல் அல்லது வைத்திருத்தால் IPC – 498 பிரிவின் படி குற்றமாகும்.
=> அடுத்தவர் மனைவியுடன் அல்லது வேறொரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால் IPC – 497 பிரிவின் படி குற்றமாகும்.
=> கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போதே மீண்டும் திருமணம் செய்து கொண்டால் IPC – 494 பிரிவின் படி குற்றமாகும்.
=> ஏற்கனவே திருமணம் ஆன விசயத்தை மறைத்து இன்னொரு திருமணம் செய்து கொண்டால் IPC – 495 பிரிவின் படி குற்றமாகும்.
=> கணவர் அல்லது கணவரின் குடும்பத்தார் கொடுமைப் படுத்தினால் IPC – 498-அ பிரிவின் படி குற்றமாகும்.
=> மனைவி அல்லது பெண்ணின் இசைவின்றி கருவை சிதைத்தால் IPC – 313 பிரிவின் படி குற்றமாகும்.
=> ஒரு பெண்ணுக்கு மாற்று செய்கையின் மூலமாக தானாகவே கருவை சிதைக்கச் செய்தால் IPC – 314 பிரிவின் படி குற்றமாகும்.
=> பெண்ணுக்கு குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தால் IPC – 315 பிரிவின் படி குற்றமாகும்.