கருவை சிதைவித்தல் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-

அறிந்துகொள்வோம் : கருவை சிதைவித்தல் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-
பிரிவு 312 : கருவைச் சிதைவித்தல் :
கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்குக் கருசிதைவை, அப்பெண்ணின் உயிரைக் காக்கும் பொருட்டு, நல்லெண்ணத்துடன், அத்தகைய கருச்சிதைவு விளைவிக்கப் படாதிருக்குமானால் தன்னிச்சையாக விளைவிக்கும் எவராயினும் தண்டிக்கப்படுவர். தானே கருசிதைவை விளைவித்துக் கொள்ளும் பெண்ணும் இப்பிரிவில் அடங்குவர்.
தண்டனை : 3 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்
பிரிவு 313 : பெண்ணின் இசைவின்றி கருவைச் சிதைவித்தல் :
பெண்ணின் இசைவின்றி அந்தப்பெண் கருவியக்க நிலையில் இருந்தாலும் இராவிட்டாலும் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்குக் கருசிதைவை, அப்பெண்ணின் உயிரைக் காக்கும் பொருட்டு, நல்லெண்ணத்துடன், அத்தகைய கருச்சிதைவு விளைவிக்கப் படாதிருக்குமானால் தன்னிச்சையாக விளைவிக்கும் எவராயினும் தண்டிக்கப்படுவர்.
தண்டனை : ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்
பிரிவு 314 : கருசிதைவு விளைவிக்கும் உட்கருத்துடன் செய்யப்பட்ட செய்கையால் விளைவிக்கப்பட்ட மரணம்:
கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணுக்குக் கருசிதைவை விளைவிக்கும் உட்கருத்துடன், அந்தப் பெண்ணின் மரணத்தை விளைவிக்கிற செய்கை எதையும் செய்கிற எவராயினும் தண்டிக்கப்படுவர்.
தண்டனை : 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்