ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்

ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள்....!!

நாம் அனைவரும் வக்கீல்கள் அல்ல, மேலும் நமது கல்வியில் அடிப்படை சட்டமும் இல்லை. பிறகு எப்படி ஓர் சாமானிய இந்தியன் தனக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். முதலில் ஆறாம் வகுப்பில் இருந்தாவது அடிப்படை சட்டத்தை கட்டாய கல்வியாக்க வேண்டும்.
அடிப்படை சட்டம் தெரியாததால் தான், மளிகை கடையில் இருந்து சாலை தெரு முனைகள் வரை பல இடங்களில் நாம் நமக்கு தெரியாமலேயே ஏமார்ந்து வருகிறோம். எம்.ஆர்.பி என்பது அதிகபட்ச விலை தான், அதற்கு கீழே விலை பேரம் பேசி பொருளை வாங்கலாம் என்ற சட்டம் இருக்கிறது.
இது போன்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் சிலவன இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்..
* பெண் கைது
பொழுது சாய்ந்த பிறகு அல்லது விடியலுக்கு முன் பெண்ணை கைது செய்ய போலிசுக்கு அதிகாரம் இல்லை.
* பெண் விசாரணை
பெண் ஒருவரை வெறும் கேள்வி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல வேண்டும் என்றில்லை. அவரது வீட்டிலேயே விசாரணை செய்யலாம்.
* வருமானத் துறை அதிகாரி
நீங்கள் செய்த தவறின் அளவு அல்லது தீவரத்தை சார்ந்து வருமான துறை அதிகாரி உங்களை கைது செய்யவும், விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கிறது.
* போக்குவரத்து சட்டம்
சைக்கிள், ரிக்ஷா போன்ற மோட்டார் இல்லாத வாகனங்களுக்கு போக்குவரத்து சட்டங்கள் பொருந்தாது.
* அபராதம்
உங்களிடம் தகுந்த ஆவணங்கள் இன்றி வாகனம் ஒட்டி அபராதம் கட்டியிருந்தால், அந்த நாளில் நீங்கள் மீண்டும் வேறு எங்கும், வேறு போலீசிடம் அபராதம் கட்ட தேவையில்லை. ஆனால், மறுநாள் இது செல்லாது, அதற்குள் ஆவணங்களை சரி செய்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் வாகனம் ஓட்டக் கூடாது.
* அபராதம்
இது மது அருந்தி வாகனம் ஒட்டுவோருக்கு பொருந்தாது. ஒருமுறை மது அருந்தி நீங்கள் வாகனம் ஒட்டி இருந்தால், அதே போதையுடன் மீண்டும் ஓட்டக் கூடாது. மீறினால் மீண்டும் அபராதம் / தண்டனை விதிக்கப்படும்.
* எம்.ஆர்.பி
எம்.ஆர். பி என்பது அதிகபட்ச விற்பனை விலை, ஆதலால் நீங்கள் விலை குறைத்து கேட்டும் பொருள் வாங்கலாம். ஆனால், அச்சிடப்பட்ட விலைக்கு மேல் விற்க விற்பனையாளருக்கு உரிமை இல்லை.
* தலைமை கான்ஸ்டபிள் அதிகாரம்
நூறு ரூபாய்க்கு மேலான அபராதத்தை விதிக்க தலைமை கான்ஸ்டபிள்-க்கு அதிகாரம் இல்லை. ஆனால், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தவறுகள் செய்து சிக்கியிருந்தால் அபராத சீட்டை கொடுத்து அபராதம் கட்ட சொல்லலாம் என கூறப்படுகிறது.
* தத்தெடுக்கும் சட்டம்
உங்களுக்கு ஒரு மகன் இருந்தால், நீங்கள் மற்றொரு பிள்ளையை தத்தெடுக்க முடியாது என இந்து தத்தெடுக்கும் சட்டத்தில் (Hindu Adoptions and Maintenance Act, 1956.) குறிப்பிடப்பட்டுள்ளது.
* தத்தெடுக்கும் சட்டம்
இந்தியாவில் தனி ஆண், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
* அலைபேசி பதிவுகள்
அலைபேசியில் பேசிய பதிவுகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு நீதிபதி தீர்ப்பளிக்கலாம்.
* விவாகரத்து
ஒரு வருடம் கூட முடிவடையாமல் தம்பதி விவாகரத்து கோர முடியாது. ஒருவேளை பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருந்தால், அல்லது கட்டாயப்படுத்து திருமணம் செய்து வைத்திருந்தால் இது பொருந்தாது, அவர்கள் விவாகரத்து கோரலாம்.
* குடிநீர்
எந்த விடுதியிலும், ஹோட்டலிலும் குடி நீருக்கும், கழிவறையும் பயன்படுத்தவும் தடுக்கவும் முடியாது, அதற்கு பணம் வசூலிக்கவும் கூடாது.
* குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல்
குடித்துவிட்டு வாகனம் ஒட்டிய நபர் சுவாசிக்கும் கருவியில் உபயோகிக்க மறுப்பு தெரிவித்தால் எந்த வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யும் உரிமை போலிசுக்கு இருக்கிறது.
* பாலியல் வன்முறை
பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணுக்கு இலவசமாக மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
* கர்ப்பம் சட்டம்
கர்ப்பமான இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது.
* ஹோட்டல் சட்டம்
எந்த ஒரு ஹோட்டலும் பதின் வயதை கடந்த, திருமணமாகாத ஜோடிக்கு அறை வழங்க முடியாது என நிராகரிக்க முடியாது.
இந்தியச்சட்டம்

சொத்தை எழுதி வைத்தபின் வாரிசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் என்னசெய்வது

நான் எனது சொத்துக்களை எனது வாரிசுகளுக்கு எழுதிவைக்க விரும்புகிறேன். ஆனால் சொத்தை எழுதி வைத்தபின் வாரிசுகள் அதை வாங்கி கொண்டு என்னை கண்டுகொள்ளாமல் அனாதையாக விட்டுவிட்டால் என்னசெய்வது. இதற்கு சட்டத்தில் பாதுகாப்பு உண்டா???


பெற்றோர் மற்றும் ழூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் – 2007 பிரிவு 23 - ன் படி நீங்கள் உங்கள் சொத்தை வாரிசுகளுக்கு எழுதி வைக்கும் போது அதில் சொத்தை பெறுபவர் பெற்றோருக்கு உதவிகளையும் ஆரோக்கியம் ரீதியாக செய்ய வேண்டிய தேவைகளையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையிட்டு எழுதி வைத்தால், நீங்கள் சொத்தை எழுதி வைத்த பின் சொத்தை பெறுபவர் உங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் அந்த சொத்து மோசடியாகவோ அல்லது கட்டாயப்படுத்தியோ பெறப்பட்டதாக கருதப்படும். அச்சுழ்நிலையில் எழுதிவைத்த சொத்து மற்றும் உரிமை மாற்றம் சட்டப்படி செல்லாமல் ஆகிவிடும்.

நீதிமன்றகளில் விரைவாக நீதி கிடைக்க என்ன வழி?

நீதிமன்றகளில் வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்க அதிக காலம் ஆகிறது. சில சமயங்களில் உன்மைக்கு நீதி கிடைக்காமலும் போகிறது. எனவே விரைவாக நீதி கிடைக்க என்ன வழி? உன்மைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது???


இந்திய அரசியல் அமைப்பு சட்டப் படியும், இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகையினாலும், குற்ற செயல்களின் என்ணிக்கையாலும், நீதி மன்றங்களில் நேரடியாக தொடரப்படும் பலதரப்பட்ட வழக்குகளின் என்ணிக்கையாலும் அனைத்து வழக்குகலுக்கும் உடனடியாக நீதிமன்ற தீர்ப்பு கிடைக்காமல் போவதும் அதற்காக சிறிது காலம் காத்திருப்பதும் தவிற்க இயலாதது. இருந்த போதிலும் அரசு பலதரப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பல சட்ட திருத்தங்களை கொன்டுவந்து வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துக் கொன்டுதான் இருக்கிறது.
உதாரணமாக, லோக் அதாலத்தின், கிரிமினல் வழக்குகலுக்கான விரைவு நீதிமன்றங்கல், முக்கிய வழக்குகலுக்கான தனி மற்றும் சிறப்பு நீதிமன்றங்கல், குழந்தைகள் மற்றும் பென்களுக்கான தனி நீதி மன்றங்கல், வியத்துக்கான இழப்பீடு, நுகர்வோர் குறைபாடுகள், கடன் வசூலித்தல் மற்றும் பலதரப்பட்ட வழக்குகலுக்கு தனிப்பிரிவு நீதி மன்றங்கல் நடைமுறையில் உள்ளன.
இருந்த போதிலும் நீதி மன்றங்கலில் வழக்கு பதிவு செய்ய ஆகும் காலம், பதிவிற்கு பின்னால் விசாரனை நடைமுறைகள், வழக்கின் எதிராலிக்கு வழங்கப்படும் நேரம் மற்றும் வாய்ப்பு, நீதி மன்ற தீர்ப்பிற்கு பின்னால் பின்பற்றப்படும் வழிமுறைகள், நீதிமன்றங்கலில் நீதி அரசர்களின் என்னிக்கை குறைவு என பல காரனங்கலாலும் வழக்கு தாமதம் ஆகும் நிலையை நாம் எற்றுக்கொள்ளத்தான் வேன்டும்.
நீதிமன்றங்கலுக்கு தேவை சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள். அதனை முறையாக மற்றும் சரியான நேரத்தில் சமர்பிக்க தவரும் பட்சத்தில் சில சமயங்களில் உன்மைக்கு நீதி கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். அதற்காகத்தான் மறு சீறாய்வு மற்றும் மேல் முறையீடு போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கிரைய ஒப்பந்தப் பத்திரம் எவ்வளவு காலம் வரை செல்லும்

வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டுமா?? கிரைய ஒப்பந்தப் பத்திரம் எவ்வளவு காலம் வரை செல்லும்???


சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 105 – வது படி ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட குத்தகைகள் அல்லது வாடகைகள், வருடா வருடம் புதுப்பிக்கும் குத்தகைகள், வருடாந்திர வாடகையை முன்னரே பெற்றுக் கொள்ளும் குத்தகைகள் போன்ற ஒப்பந்தப் பத்திரத்தை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
கிரைய ஒப்பந்தப் பத்திரம் எவ்வளவு காலம் எழுதி ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறிர்களோ அவ்வளவு காலம் வரை செல்லும். அதிக பட்சமாக 36 மாதங்கள் வரை நில கிரைய ஒப்பந்தம் போடலாம் என சட்டம் அனுமதிக்கிறது.

நிலத்தை வாங்கிய நபர் மீதி தொகையினை ஒப்பந்த காலத்திற்குள் செலுத்தி கிரையம் செய்து கொள்ளவில்லை.

ஒரு வருடம் முன்பு நிலத்தை விற்பதற்காக ஒருவருடன் கிரைய ஒப்பந்தப் பத்திரம் எழுதி முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்தோம். ஆனால் நிலத்தை வாங்கிய நபர் மீதி தொகையினை ஒப்பந்த காலத்திற்குள் செலுத்தி கிரையம் செய்து கொள்ளவில்லை.


எனவே நாங்கள் வேறு ஒருவருக்கு நிலத்தை விற்கும் போது வில்லங்கச் சான்றிதழில் பழைய கிரய ஒப்பந்தப் பத்திரம் பற்றிய தகவல் வருகிறது. அதை நாங்கள் தனியாக ரத்து செய்ய முடியுமா? அல்லது எவ்வாறு ரத்து செய்வது???
பவர் பத்திரத்திற்கு மட்டும் தான் பவர் கொடுத்த நபர் ரத்து செய்யும் உரிமையை சட்டம் தருகிறது. எனவே நீங்கள் வழக்கறிஞர் மூலம் உரிய நீதிமன்றத்தில் உங்கள் கிரய ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து தரும்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெற்று அதன் நகலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்தால் உங்கள் கிரய ஒப்பந்தப் பத்திரம் சட்டப்படி ரத்தாகி விடும். அதன் பின்னிட்டு வரும் வில்லங்க சான்றிதழில் கிரயப ஒப்பந்தப் பத்திரம் ரத்து என்று பதிவாகி வரும்.

புகார் பெறாமல் காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்ய முடியும்?

எந்த விதமான வழக்குகளில் புகார் பெறாமல் காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்ய முடியும்? மேலும் பொதுமக்கள் எல்லா விதமான புகார்கள் மற்றும் வழக்குகளை காவல் துறையினரிடம் இருந்தோ அல்லது நீதிமன்றத்தில் இருந்தோ திரும்ப பெற முடியுமா???


கொலை, கொள்ளை, மத சம்மந்தமான செயல் பாடுகள், விபத்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், கூட்டம் கூட்டுதல், கள்ள நாணயம், போதை பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை, கலாச்சார சீர்கேட்டுச் செயல்பாடுகள், பொதுமக்கள் சுகாதாரம், பாதுகாப்பு, ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்றம் மற்றும் அரசு ஆனையை அவமதிக்கும் மற்றும் மீறிய செயல்பாடுகள் மற்றும் பல செயல்பாடுகளுக்கு காவல் துறையினர் தானாகவே வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
பொதுமக்கள் காவல் துறையினரிடமிடம் அளிக்கும் புகார்களையும் மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற முடியும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. ஆனால் தற்சமயம் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ள அறிக்கையின் படி நீதிமன்றத்தில் தொடப்பட்டுள்ள பொது நல வழக்கினை மனுதாரர் திரும்ப பெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால்

முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அது சட்டப்படி கணவன் மனைவி உறவாக கருதப்படுமா??
18 வயது பூர்த்தி அடைந்த ஆணும் பெண்ணும் இதற்கு முன்னால் வேறு எவர் ஒருவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் அல்லது திருமணத்திற்கு பிறகு முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் இருவரும் சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தால் அது சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவி உறவாகவே கருதப்படும். மேலும் அரசு பதிவேட்டில் பதிவு செய்தால் மட்டுமே கணவன் மனைவி என்கின்ற உறவு என்றில்லாமல் இருவரின் உறவு முறைகள், பழக்கவழக்கங்கள், மற்றும் கலாச்சார சடங்குகள் போன்றவற்றை வைத்தும் கணவன் மனைவி என்கிற உறவாக நீதிமன்றங்களில் கருதப்படும்.

உயில் நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே சொத்தை மாற்ற முடியும்

ஒருவரின் பெயரில் உயில் இருந்தும் அவர் அதை நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே சொத்தை அவர் பெயருக்கு மாற்ற முடியும் என்று கூறுகிறார்களே அது ஏன்??

இந்தியாவில் சார்டர்டு சிட்டீஸ் (CHARTERED CITIES) என்றழைக்கப்படும் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களின் வரையறைக்குள் சொத்து இருந்தாலோ அல்லது உயில் எழுதியவர் அந்த நகரில் வசித்திருந்தாலோ உயில் எழுதியவர் இறந்த பின் உயிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்னரே வாரிசுதாரர் சொத்தை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்ய முடியும். இதை தவிர மற்ற இடங்களில் சொத்து இருந்தாலோ அல்லது உயிலை எழுதியவர் வசித்திருந்தாலோ நீதிமன்றத்தின் அங்கீகாரம் தேவையில்லை. நேரடியாக வாரிசுதாரர் உயிலை வைத்து சொத்தை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை மிரட்டி அபராதம் வசூலிக்கின்றனர்

'சட்டம் - ஒழுங்கு போலீஸார் சிலர் சிறிய சாலைகள், தெருக்களில் நின்றுகொண்டு ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை மிரட்டி அபராதம் வசூலிக்கின்றனர். இது முற்றிலும் தவறான நடவடிக்கை.

'வெள்ளை சட்டை' அணிந்திருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு மட்டும்தான் அபராதம் வசூலிக்கும் உரிமை உள்ளது. அவரிடம்தான் அபராதம் வசூலித்ததற்கு கொடுக்கப்படும் ரசீது புத்தகம் இருக்கும்.

சட்டம் - ஒழுங்கை சரிசெய்யும் காக்கி சட்டை போலீஸாருக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிடும் அதிகாரம் மட்டும்தான் இருக்கிறது. அபராதம் வசூலிக்க அதிகாரம் கிடையாது.

ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை காக்கி சட்டை போலீஸார் பிடித்தாலும், அருகே இருக்கும் போக்குவரத்து போலீஸாரிடம்தான் அந்த நபரை ஒப்படைக்க வேண்டும்.

காக்கி சட்டை அணிந்திருக்கும் போலீஸார் யாராவது அபராதம் வசூலித்தால், அந்த மாதிரியான வசூல் ராஜாக்களை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள்

வேலையில் இருக்கும் பெண்கள் விவாகரத்திற்கு பின்னிட்டு ஜீவனாம்சம் பெற முடியுமா?

படித்த மற்றும் வேலையில் இருக்கும் பெண்கள் விவாகரத்திற்கு பின்னிட்டு கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியுமா??
ஜீவனாம்சம் என்பது விவாகரத்து பெற்ற பெண்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையான செலவினங்களுக்காக கணவரிடமிருந்து பெற்று தருவது. அன்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விவாகரத்து வழக்கின் தீர்ப்பில் படித்த மற்றும் வேலையில் இருக்கும் பெண்கள் அவர்கள் சுயமாக சம்பாதிக்க முடியும் சூழ்நிலையில் இருப்பதால் ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் பெண்ணிற்கு ஏற்பட்ட இழப்பீட்டிற்கு கணவரிடமிருந்து இழப்பீட்டு பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தினால்

மனைவியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைபடுத்தினால் காவல் நிலையத்தில் புகார் செய்தால் இது குடும்ப பிரச்சனை என்று புகாரை ஏற்க மறுத்தால் எங்கு சென்று புகார் செய்வது?


மனைவியை கணவரோ அல்லது அவரது உறவினர்களோ சேர்ந்து கொண்டு கொடுமை படுத்தினால் அது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498 பிரிவு “அ” (கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் பெண்ணை கொடுமை படுத்துதல்) கீழ் கிரிமினல் குற்றமாகும். ஆனால் அன்மையில் உச்சநீதிமன்றம் குடும்ப பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய கூடாது என்றும் அவ்வாறு வழக்கு பதிவு செய்தாலும் கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட கூடாது என்றும் வழியுறுத்தியுள்ளது. எனவே இது போன்ற பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை நேரடியாக குற்றவியல் நீதிமன்றத்தில் DOMESTIC VIOLENCE ACT – 2005 படி சம்மந்தப்பட்டவர்களின் மேல் வழக்கு தொடர முடியும்.

உயிலை எழுதியவர் திருத்தம் செய்தால் அது சட்டப் படி சரியா?

உயிலை எழுதியவர் அதை ரத்து செய்தாலோ அல்லது திருத்தம் செய்தாலோ அது சட்டப் படி சரியா?? திருத்தப்பட்ட உயில் சட்டப்படி செல்லுபடி ஆகுமா?

இந்திய சொத்துரிமை சட்டம் மற்றும் வாரிசுரிமை சட்டப்படி உயிலை எழுதியவர் அவர் விருப்பத்திற்கு இணங்க அதை ரத்து செய்யவோ அல்லது திருத்தம் செய்யவோ அவருக்கு உரிமை உண்டு. அது சட்டப்படி செல்லுபடி ஆகும்.

நுகர்வோர் குறைபாடுகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?

நுகர்வோர் குறைபாடுகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது??


 இது கிரிமினல் அல்லது சிவில் வழக்குகள் போல பல வருடம் நடைபெறுமா??
நுகர்வோர் குறைபாடுகள் சம்மந்தமான வழக்குகளை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு தொடர வேண்டும். இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி வழக்கு தொடர்ந்த 90 நாட்களுக்குள் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்க வேண்டும் என்பது சட்டமாகும்.

உறவினர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டால்

திருமணத்திற்கு பிறகு மனைவி கணவரிடமோ அல்லது கணவர் மனைவியிடமோ தன் சுய முடிவால் அல்லது உறவினர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டால் சேர்ந்து வாழ விரும்புவோர் எங்கு சென்று புகார் செய்வது??


திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் இது போன்று பாதிக்கப்படும் மனைவியோ அல்லது கணவரோ நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று கூறி குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். அவ்வாறு வழக்கு தொடரும் பட்சத்தில் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இருவரையும் அழைத்து கலந்தாய்வினை மேற்கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வழிவகை செய்யும்.

கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய குறிப்பிட்ட கால நிர்ணயம் உள்ளதா?

கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய குறிப்பிட்ட கால நிர்ணயம் உள்ளதா?

கிரிமினல் வழக்குகளை பொறுத்தவரை குற்றச்செயல் நடை பெற்ற உடன் வழக்கு பதிவு செய்தல் அவசியம். சிவில் வழக்குகளை பொறுத்தவரை கால நிர்ணயம் ஏதும் கிடையாது. ஆனால் சில சமயங்களில் கால தாமதத்திற்கு நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவிக்க நேரிடும். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னரே வழக்கு பதிவு செய்ய முடியும். எந்த வகையான வழக்குகளாக இருந்தாலும் கால தாமதம் செய்தால் சில சமயங்களில் வழக்கு பதிவு செய்ய முடியாமலோ அல்லது எதிராளிக்கு சாதகமாக மாறவோ வாயப்புள்ளது. எனவே கால தாமதத்தை தவிர்ததல் நல்லது.

விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா?

காவல் துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா??
 அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்??

காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அவ்வாறு அடித்தால் கீழ்காணும் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.
IPC – 166 : ஒருவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் சட்டத்தின் செயல்பாடுகளை மீருதல்.
IPC – 330 : ஒப்புதலை பெறுவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 357 : சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்.
IPC – 321 : தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.
IPC – 322 : தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.
IPC – 324 : ஆயுதங்கள் மூலம் காயம் விளைவித்தல்.
IPC – 307 : கொலை முயற்சி.
மேலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அடித்தால் அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீதித்துறையில் கல்வி தகுதி இல்லாதவர் ஏதேனும் பதவி வகிக்க முடியுமா?


இந்திய நாடாளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் மற்றும் சட்ட திருத்தம் கொண்டு வரும் அரசியல்வாதிகளுக்கு எந்த வித அடிப்படை கல்வி தகுதியும் தேவையில்லை. இது போல அந்த சட்டத்தை கையாளும் நீதித்துறையில் கல்வி தகுதி இல்லாதவர் ஏதேனும் பதவி வகிக்க முடியுமா???

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்த விதமான சட்டக் கல்வி தகுதியும் இல்லாதவர் ஆனால் நன்கு சட்டம் தெரிந்தவர் மற்றும் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க முடியும் என்றுள்ளது.

நானும் எனது மனைவியும் இருவரும் சம்மதத்துடன் பிரிய விரும்புகிறோம்

எனக்கு திருமணம் ஆகி 6 மாதம் காலம் ஆகிறது. சில காரணங்களால் நானும் எனது மனைவியும் இருவரும் சம்மதத்துடன் பிரிய விரும்புகிறோம்.

எங்களது திருமணம் முறைப்படி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்தது, ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. எனவே ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் பிரிவதாக பத்திரம் எழுதி இருவரும் கையொப்பம் இட்டு சில நபர்களை சாட்சியாக கையொழுத்து வாங்கிக் கொண்டால் அது முறைப்படி பிரிந்ததாக ஆகுமா??? இது சட்டப்படி செல்லுமா???
உங்கள் திருமணம் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் முறைப்படி நட்ந்துள்ளது. எனவே உங்கள் திருமணத்தை பதிவு செய்தாலும் அல்லது செய்யாமல் விட்டிருந்தாலும் இந்து திருமணச் சட்டப்படி நீங்கள் இருவரும் கணவன் மனைவி என்கின்ற உறவை பெறுகிறீர்கள். எனவே நீங்கள் இருவரும் முறையாக பிரிய நினைத்தால் குடும்பவியல் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற வேண்டும். இதுவே சரியான சட்ட வழிமுறை. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நீங்கள் இருவரும் பிரிவதாக பத்திரம் எழுதிக் கொள்வது சட்டப்படி செல்லாது. இது போல் செய்வது பிற்காலத்தில் பல பிரச்சனைகளையும் சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க முடியுமா?

நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை விரைவாக முடிக்க முடியுமா?? விரைவு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர முடியுமா??


சிவில் வழக்குகளை பொருத்தவரை வழக்குதாரர்கள் நீதிமன்றத்திற்கு உரிய முறையில் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் தான் வழக்கினை விரைவாக முடிக்க முடியும். வழக்கினை விரைவாக முடிக்க நினைப்பவர்கள் லோக் அதாலத்தின் (மக்கள் நீதிமன்றம்) முறையினை தேர்வு செய்து வழக்குதாரர்கள் சம்மதத்தின் பேரில் வழக்கிற்கு விறைவாக தீர்வு காண முடியும்.
விரைவு நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளை மட்டும் விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சிவில் வழக்குகளுக்கு என்று எந்த விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படவில்லை.

வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள்

நான் வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள். இப்போது அதை திரும்ப தர என்னை அழைகழிக்கறார்கள். இது சட்டப்படி சரியான செயலா? இதற்கு சட்டத் தீர்வு என்ன???


நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனை சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். மேலும் இது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது. இது போன்ற குற்றச் செயல்களுக்கு கீழ்காணும் பிரிவின் கீழ் வழக்கு பதிவும் செய்ய முடியும்.
IPC-374 : சட்டப்பூர்வமற்ற கட்டாய உழைப்பு
IPC-370 : அடிமையாக வகை செய்தல்
IPC-503 : குற்றமுறு மிரட்டல்
IPC-405 : குற்றமுறு நம்பிக்கை மோசடி., மற்றும் பல
நீங்கள் தற்சமயம் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) என்றால் என்ன?

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் என்ன??
சட்டப்பணி அதிகார அமைப்பு சட்டம் – 1987-ல் 27- ஆவது பிரிவின் படி, லோக் அதாலத்தின் (மக்கள் நீதிமன்றம்) வழங்கும் தீர்ப்பு நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் இருதரப்பினரின் சமாதானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே இதில் யாரும் வெற்றி பெற்றவராகவோ அல்லது தோல்வியுற்றவறாகவோ கருதப்பட வேண்டியதில்லை.
லோக் அதாலத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது, இதற்கு நீதிமன்ற கட்டணம் கிடையாது. எனவே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தாலும் இந்த நீதிமன்றத்தின் மூலம் சமாதானம் ஏற்பட்டால் ஏற்கனவே நடந்து வருகிற வழக்கிற்காக கட்டிய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற முடியும். இதில் எந்த வகையான சட்ட வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது இல்லை. இயற்கை நீயதியின் படி பின்பற்றினால் போதுமானது

விவாகரத்து கிடைக்கும் முன் மறுதிருமணம் செய்து கொள்ளலாமா

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர திருமணம் செய்து எத்தனை கால ஆண்டுகள் ஆகி இருத்தல் அவசியம்? வழக்கு தொடர்ந்த பின் விவாகரத்து கிடைக்கும் முன் மறுதிருமணம் செய்து கொள்ளலாமா???


இந்திய குடும்பவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர குறைந்த பட்சம் திருமணம் ஆகி 1 வருட காலம் ஆகி இருத்தல் அவசியம். தற்போதைய குடும்பவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தின் படி கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த ஒரு சில தினங்கள் கழித்து நீதிமன்றத்தில் மறுதிருமணம் பற்றி மனு தாக்கல் செய்து விட்டு விவாகரத்து கிடைக்கும் முன் வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ளலாம்

நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை வைத்து அந்த நிலத்தை வாங்கலாமா?

நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை வைத்து அந்த நிலத்தை வாங்கலாமா?
நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை மட்டும் வைத்துக் கொண்டு நிலத்தை வாங்கலாம். ஆனால் வில்லங்கச் சான்றிதழ் மூலம் சரிபாத்துக் கொள்ளவும். மேலும் ஒரிஜினல் பத்திரம் மற்றும் பட்டா தொலைந்த விஷயத்தை நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது காவல் துறையின் மூலமாகவோ உறுதி படுத்திச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

கட்டிடம் மற்றும் இடத்தை வாடகைக்கு விடுதல் தொடர்பானவற்றில் ஏற்படும் குற்றங்கள்

கட்டிடம் மற்றும் இடத்தை வாடகைக்கு விடுதல் மற்றும் வாடகைக்கு எடுத்தல் தொடர்பானவற்றில் ஏற்படும் குற்றங்கள் :


ஒருவர் தனிப்பட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ கட்டிடத்தை அல்லது இடத்தை வாடகைக்கு விடுவது வழக்கம். அவ்வாறு வாடகைக்கு விடும் போது அதை குடியிருப்புக்காகவோ அல்லது வணிக பயன்பாட்டிக்காகவோ பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது வாடகைக்கு எடுத்தவர் ஒப்பந்த விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தின் உரிமையாளர் ஒப்பந்ததாரருக்கு எழுத்து பூர்வமாக தெரியப்படுத்தி விதிமுறை மீறல்களை சரி செய்து கொள்ளலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விதிமீறல்களை மேற்கோள் காட்டி கட்டிடத்தை காலி செய்து தருமாறு தெரிவிக்கலாம். உடனடியாக காலி செய்ய வேண்டுமென்றோ அல்லது ஒப்பந்ததாரர் வணிக நடவடிக்கையில் தொந்தரவு செய்தாலோ அல்லது ஒப்பந்த தேதிக்கு முன்னரே காலி செய்ய வேண்டும் என அச்சுருத்தினாலோ அது இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய நேரிடும். மேலும் ஒப்பந்ததாரர் கட்டிட உரிமையாளரின் மேல் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் நிலையும் ஏற்படலாம்.
அதே போன்று ஒப்பந்ததாரர் ஒப்பந்த விதி முறைகளை மீறினாலோ அல்லது கட்டிடத்திற்கு ஏதாவது சேதம் ஏற்படுத்தினாலோ அது ஒப்பந்தத்தை மீறிய செயலாக கருதி ஒப்பந்தம் ரத்தாகும் சூழ்நிலையும் ஏற்படும். மேலும் ஒப்பந்த தேதி முடிவடையும் முன்னரே கட்டிடத்தை காலி செய்யும் தருவாயில் கட்டிட உரிமையாளருக்கு ஏதாவது இழப்பீடு ஏற்பட்டால் கட்டிட உரிமையாளர் அந்த இழப்பீட்டை ஒப்பந்ததாரர் டெப்பாசிட் தொகையையிலுருந்து பிடிக்கவும் கட்டிட உரிமையாளருக்கு உரிமை உண்டு. அதே போல் ஒப்பந்ததாரர் ஒப்பந்த கால அளவு நிறைவடையும் தருவாயில் கட்டிட உரிமையாளருக்கு முறைப்படி முன்னறிவிப்புடன் கட்டிடத்தை காலி செய்து கொடுத்தல் அவசியம்.

விற்ற சொத்தினை திரும்ப பெற முடியுமா?

விற்ற சொத்தினை திரும்ப பெற முடியுமா??
தமிழக அரசின் நில அபகரிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால், வழக்கினை நீதிமன்றம் நிலம் அபகரிக்கப்பட்டதா அல்லது விருப்பத்தின் பேரில் விற்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும். நிலம் அபகரிக்கப்பட்டதாக கருதப்படும் நிலையில் நிலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காவல் துறையினை அணுகலாமா

நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காவல் துறையினை அணுகலாமா??
பொதுவாக நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் ஆனால் கிரிமினல் குற்றம் சம்மந்தமான செயல்பாடுகள் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தாலோ அல்லது செயல்பாடுகள் நடந்து இருந்தாலோ காவல் துறையினை அணுகி வழக்கு பதிவு செய்யலாம்.

வாரிசுதாரரில் ஒருவர் சொத்தை பிரிக்க ஒத்துழைப்பு தரவில்லை என்றால்

வாரிசுதாரரில் ஒருவர் சொத்தை பிரிக்க ஒத்துழைப்பு தரவில்லை என்றால் எப்படி சொத்தை பிரிப்பது??
சொத்தை பிரிக்க நினைக்கும் வாரிசுதாரர் மற்ற வாரிசுதாரர்களுக்கு சொத்தை பிரிக்க விருப்பம் தெரிவித்து வழக்கறிஞர் மூலம் நேட்டீஸ் அனுப்ப வேண்டும். மறுப்பு தெரிவிக்கும் வாரிசுதாரரின் பதில் நேட்டீஸ்ன் மூலம் அவர் கூறும் காரணங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்தை பிரிக்க நீதிமன்ற உத்தரவு பெற முடியும்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால் சொத்தை திரும்ப பெற முடியுமா??

திருமணத்திற்கு பின்னிட்டு கணவர் தன் சுயசம்பாத்தியத்தில் மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை விவாகரத்து ஏற்பட்டு விட்டால் சொத்தை திரும்ப பெற முடியுமா??
விவாகரத்து வழக்கின் போதே மனைவியின் பெயரில் வாங்கிய சொத்தினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சொத்தை திரும்ப ஒப்படைக்கும் படி முறையிடலாம். தவறும் பட்சத்தில் கணவர் விவாகரத்திற்கு பின்னிட்டு அந்த சொத்து தனது சுய சம்பாத்தியத்தில் தான் மனைவியின் பெயரில் வாங்கப்பட்டது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதனை கணவர் நிரூபிக்கும் பட்சத்தில் சொத்து திரும்ப கிடைக்கும் வாய்ப்புள்ளது