பிறப்பு சான்றிதழின் முக்கிய்த்துவம்

அறிந்து கொள்வோம் : பிறப்பு சான்றிதழின் முக்கிய்த்துவம் :
எவரொருவர் 1985 ஆம் ஆண்டிற்கு பின்பு பிறந்தவராக இருக்கும் நிலையில், அவருக்கு பிறப்புச் சான்றிதழ் பல்வேறு அரசு துறைகள் சார்ந்த வேலைபாட்டிற்கு முக்கிய சான்றிதழாக தேவைப்படுகிறது. உதாரணமாக பாஸ்போட் விண்ணப்பித்தல், அரசு வேலையில் சேருதல் மற்றும் பல..,
இச்சூழ்நிலையில் பிறப்புச் சான்றிதழின் குறிப்பிட்டுல்ல பிறந்த தேதியும் அவரது கல்விச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் இணையாக இருத்தல் வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் அவரவர் குடியிருப்பு வரையறைக்கு உட்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். வருவாய்த்துறை அலுவலர் பதிவேட்டில் குறிப்பிட்ட தேதியில் உங்களது பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றால் நீங்கள் வழக்கறிஞர் உதவியுடன் நீதி மன்றத்தினை அணுகி பிறப்பு சான்றிதழ் வழங்க உத்திறவு தரும்படி ஆணை பெற்று வருவாய்த் துறை அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.