சொத்தை எழுதி வைத்தபின் வாரிசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் என்னசெய்வது

நான் எனது சொத்துக்களை எனது வாரிசுகளுக்கு எழுதிவைக்க விரும்புகிறேன். ஆனால் சொத்தை எழுதி வைத்தபின் வாரிசுகள் அதை வாங்கி கொண்டு என்னை கண்டுகொள்ளாமல் அனாதையாக விட்டுவிட்டால் என்னசெய்வது. இதற்கு சட்டத்தில் பாதுகாப்பு உண்டா???


பெற்றோர் மற்றும் ழூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் – 2007 பிரிவு 23 - ன் படி நீங்கள் உங்கள் சொத்தை வாரிசுகளுக்கு எழுதி வைக்கும் போது அதில் சொத்தை பெறுபவர் பெற்றோருக்கு உதவிகளையும் ஆரோக்கியம் ரீதியாக செய்ய வேண்டிய தேவைகளையும் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையிட்டு எழுதி வைத்தால், நீங்கள் சொத்தை எழுதி வைத்த பின் சொத்தை பெறுபவர் உங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் அந்த சொத்து மோசடியாகவோ அல்லது கட்டாயப்படுத்தியோ பெறப்பட்டதாக கருதப்படும். அச்சுழ்நிலையில் எழுதிவைத்த சொத்து மற்றும் உரிமை மாற்றம் சட்டப்படி செல்லாமல் ஆகிவிடும்.