கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல்

அறிந்துகொள்வோம் : இந்திய தண்டனை சட்டங்கள்:

கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-
பிரிவு 498அ : கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்துதல்.
=> பெண்ணை தற்கொலை செய்ய தூண்டுதல்
=> பெண்ணின் உயிர் மற்றும் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் (உடலியல் & மனலியல்) கொடுங்காயம் எற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல்.
=> சொத்தினை அல்லது விலைமதிப்புள்ள பொருளை பெறுவதற்கு பெண்ணை சித்ரவதை செய்தல் அல்லது கொடுக்க மறுத்த பெண்ணை சித்ரவதை செய்தல்.
தண்டனை : 3 வருடம் வரை சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
வரதட்சனை மரணம் சம்மந்தமான குற்றங்களுக்கான தண்டனைகள் :-
பிரிவு 304ஆ : வரதட்சனை மரணம் :
பெண் ஒருவர் திருமணமான 7 ஆண்டுகளுக்குள் கணவன் அல்லது அவரது உறவினர்களால் வரதட்சனை கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு தீக்காயங்கள் அல்லது உடற்காயங்கள் அல்லது சாதாரண சூழ்நிலையில் அல்லது வேறு காரணங்களினால் இறந்திருக்கும் போது அது வரதட்சனை மரணம் என அழைக்கப்படும். அத்தகைய மரணத்தை இறந்த பெண்ணின் கணவர் அல்லது கணவரின் உறவினர்கள் ஏற்படுத்தியதாக கொள்ளப்படும்.
தண்டனை : குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையும் பெறுவர்