லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) என்றால் என்ன?

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் என்ன??
சட்டப்பணி அதிகார அமைப்பு சட்டம் – 1987-ல் 27- ஆவது பிரிவின் படி, லோக் அதாலத்தின் (மக்கள் நீதிமன்றம்) வழங்கும் தீர்ப்பு நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் இருதரப்பினரின் சமாதானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே இதில் யாரும் வெற்றி பெற்றவராகவோ அல்லது தோல்வியுற்றவறாகவோ கருதப்பட வேண்டியதில்லை.
லோக் அதாலத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது, இதற்கு நீதிமன்ற கட்டணம் கிடையாது. எனவே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தாலும் இந்த நீதிமன்றத்தின் மூலம் சமாதானம் ஏற்பட்டால் ஏற்கனவே நடந்து வருகிற வழக்கிற்காக கட்டிய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற முடியும். இதில் எந்த வகையான சட்ட வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது இல்லை. இயற்கை நீயதியின் படி பின்பற்றினால் போதுமானது