எந்த அடிப்படையில் குற்றவாளிகளுக்கு சட்டத்தால் தண்டனை வழங்கப்படுகிறது??

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :
எந்த அடிப்படையில் குற்றவாளிகளுக்கு சட்டத்தால் தண்டனை வழங்கப்படுகிறது??
நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை வழங்கிய பின்னரே அவரை குற்றவாளி எனக் கூற வேண்டும். அதுவரை அவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுவதே நீதிமன்றத்தின் மரபு. சட்டத்தின் பார்வையில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னால் அக்குற்றத்திற்கு உண்டான சாட்சி மற்றும் குற்றம் செய்தவரின் நேக்கம் மற்றும் யாரால் அல்லது யாருடைய தூண்டுதலின் பேரால் மற்றும் யாரை, எந்த சூழ்நிலையில் அக்குற்றச் செயல் நடைபெற்றது என்பதனையும் அக்குற்ற செயலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் அக்குற்றச் செயலினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை மற்றும் குற்றம் செய்தவரின் வயது, பாலினம் மற்றும் இது போன்ற குற்றச் செயல்கள் தொடராமல் இருக்க வேண்டி போன்றவற்றை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்படும்.