நிலத்தை வாங்கிய நபர் மீதி தொகையினை ஒப்பந்த காலத்திற்குள் செலுத்தி கிரையம் செய்து கொள்ளவில்லை.

ஒரு வருடம் முன்பு நிலத்தை விற்பதற்காக ஒருவருடன் கிரைய ஒப்பந்தப் பத்திரம் எழுதி முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்தோம். ஆனால் நிலத்தை வாங்கிய நபர் மீதி தொகையினை ஒப்பந்த காலத்திற்குள் செலுத்தி கிரையம் செய்து கொள்ளவில்லை.


எனவே நாங்கள் வேறு ஒருவருக்கு நிலத்தை விற்கும் போது வில்லங்கச் சான்றிதழில் பழைய கிரய ஒப்பந்தப் பத்திரம் பற்றிய தகவல் வருகிறது. அதை நாங்கள் தனியாக ரத்து செய்ய முடியுமா? அல்லது எவ்வாறு ரத்து செய்வது???
பவர் பத்திரத்திற்கு மட்டும் தான் பவர் கொடுத்த நபர் ரத்து செய்யும் உரிமையை சட்டம் தருகிறது. எனவே நீங்கள் வழக்கறிஞர் மூலம் உரிய நீதிமன்றத்தில் உங்கள் கிரய ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து தரும்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெற்று அதன் நகலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்தால் உங்கள் கிரய ஒப்பந்தப் பத்திரம் சட்டப்படி ரத்தாகி விடும். அதன் பின்னிட்டு வரும் வில்லங்க சான்றிதழில் கிரயப ஒப்பந்தப் பத்திரம் ரத்து என்று பதிவாகி வரும்.