பதிவு திருமணம் செய்து கொள்ளும் முறை

அறிந்து கொள்வோம் : பதிவு திருமணம் செய்து கொள்ளும் முறை :
இந்திய திருமண சட்டப்பிரிவின் படி பதிவு திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மேலும் நல்ல மனநிலையும் இருக்க வேண்டும்.
கோவிள்களில் திருமணம் செய்து பின்னர் பதிவு செய்ய விரும்புவேர் முதலில் அரசால் அங்கிகரிக்கப்பட்ட அல்லது அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் பதிவு செய்து திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு கோவில் நிர்வாகம் சம்பத்தப்பட்டவரிடம் வயது சான்றிதழ், குடும்ப அட்டை நகல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் கடிதம் சமர்பிக்க வேண்டும். அதன் பின்பு கோவில் நிர்வாகம் திருமணத்தை அனுமதித்து அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின்பு கோவில் திருமணச் சான்றிதழ் உடன் திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண போட்டோ, மணமக்களின் போட்டோ உடன் தலா இரண்டு சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.
திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால், திருமண மண்டபத்தின் ரசீது, கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் சான்றிதழ், திருமண போட்டோ, மணமக்களின் போட்டோ, அவர்களின் வயது சான்றிதழுடன் தலா இரண்டு சாட்சிகளுடன் சார் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.
சினிமாவில் பார்பது போன்று நேரடியாக சார் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய முடியாது. மேலும் முறையற்ற முறையில் கோவில்களில் திருமணச் சடங்கு செய்து கொண்டாலோ அல்லது காவல் நிலையத்தில் திருமணச் சடங்கு நடைபெற்றாலோ அது சட்டப்படி திருமணமாக கருத முடியாது.