முறைபடி விவாகரத்து

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :

 முறைபடி விவாகரத்து


நானும் எனது மனைவியும் ஏழு வருடமாக பிறிந்து வாழ்கிறோம். எங்கள் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. இப்பொழுது இருவரும் சம்மதத்துடன் பிறிந்து அவரவர் விருப்பம் போல வேறு வாழ்க்கை அமைத்து கொள்ள விரும்புகிறோம். இதற்காக நாங்கள் நூறு ருபாய் பத்திரத்தில் இருவரும் சம்மத்துடம் பிரிவதாக எழுதி அதை நோட்டரி வாங்கி வைத்துக் கொன்டால் அது சட்டப்படி இருவரும் பிறிந்ததாக கருத முடியுமா???
நீங்கள் குடும்பவியல் நடைமுறை சட்டப் படி உறிய நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து முறைபடி விவாகரத்து பெற வேண்டும். அதுவே முறைப்படி பிறிந்ததாக கருதப்படும். பத்திரத்தில் எழுதி பிரிவது சட்டப்படி செல்லாது. நோட்டரி என்பது ஒரு அத்தாட்ச்சியாக மட்டுமே கருதப்படும். அது நீதி மன்ற ஆனையாக கருதப்படாது.