நானும் எனது மனைவியும் இருவரும் சம்மதத்துடன் பிரிய விரும்புகிறோம்

எனக்கு திருமணம் ஆகி 6 மாதம் காலம் ஆகிறது. சில காரணங்களால் நானும் எனது மனைவியும் இருவரும் சம்மதத்துடன் பிரிய விரும்புகிறோம்.

எங்களது திருமணம் முறைப்படி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்தது, ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. எனவே ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் பிரிவதாக பத்திரம் எழுதி இருவரும் கையொப்பம் இட்டு சில நபர்களை சாட்சியாக கையொழுத்து வாங்கிக் கொண்டால் அது முறைப்படி பிரிந்ததாக ஆகுமா??? இது சட்டப்படி செல்லுமா???
உங்கள் திருமணம் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் முறைப்படி நட்ந்துள்ளது. எனவே உங்கள் திருமணத்தை பதிவு செய்தாலும் அல்லது செய்யாமல் விட்டிருந்தாலும் இந்து திருமணச் சட்டப்படி நீங்கள் இருவரும் கணவன் மனைவி என்கின்ற உறவை பெறுகிறீர்கள். எனவே நீங்கள் இருவரும் முறையாக பிரிய நினைத்தால் குடும்பவியல் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற வேண்டும். இதுவே சரியான சட்ட வழிமுறை. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நீங்கள் இருவரும் பிரிவதாக பத்திரம் எழுதிக் கொள்வது சட்டப்படி செல்லாது. இது போல் செய்வது பிற்காலத்தில் பல பிரச்சனைகளையும் சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.