கட்டிடம் மற்றும் இடத்தை வாடகைக்கு விடுதல் தொடர்பானவற்றில் ஏற்படும் குற்றங்கள்

கட்டிடம் மற்றும் இடத்தை வாடகைக்கு விடுதல் மற்றும் வாடகைக்கு எடுத்தல் தொடர்பானவற்றில் ஏற்படும் குற்றங்கள் :


ஒருவர் தனிப்பட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ கட்டிடத்தை அல்லது இடத்தை வாடகைக்கு விடுவது வழக்கம். அவ்வாறு வாடகைக்கு விடும் போது அதை குடியிருப்புக்காகவோ அல்லது வணிக பயன்பாட்டிக்காகவோ பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது வாடகைக்கு எடுத்தவர் ஒப்பந்த விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தின் உரிமையாளர் ஒப்பந்ததாரருக்கு எழுத்து பூர்வமாக தெரியப்படுத்தி விதிமுறை மீறல்களை சரி செய்து கொள்ளலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விதிமீறல்களை மேற்கோள் காட்டி கட்டிடத்தை காலி செய்து தருமாறு தெரிவிக்கலாம். உடனடியாக காலி செய்ய வேண்டுமென்றோ அல்லது ஒப்பந்ததாரர் வணிக நடவடிக்கையில் தொந்தரவு செய்தாலோ அல்லது ஒப்பந்த தேதிக்கு முன்னரே காலி செய்ய வேண்டும் என அச்சுருத்தினாலோ அது இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய நேரிடும். மேலும் ஒப்பந்ததாரர் கட்டிட உரிமையாளரின் மேல் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் நிலையும் ஏற்படலாம்.
அதே போன்று ஒப்பந்ததாரர் ஒப்பந்த விதி முறைகளை மீறினாலோ அல்லது கட்டிடத்திற்கு ஏதாவது சேதம் ஏற்படுத்தினாலோ அது ஒப்பந்தத்தை மீறிய செயலாக கருதி ஒப்பந்தம் ரத்தாகும் சூழ்நிலையும் ஏற்படும். மேலும் ஒப்பந்த தேதி முடிவடையும் முன்னரே கட்டிடத்தை காலி செய்யும் தருவாயில் கட்டிட உரிமையாளருக்கு ஏதாவது இழப்பீடு ஏற்பட்டால் கட்டிட உரிமையாளர் அந்த இழப்பீட்டை ஒப்பந்ததாரர் டெப்பாசிட் தொகையையிலுருந்து பிடிக்கவும் கட்டிட உரிமையாளருக்கு உரிமை உண்டு. அதே போல் ஒப்பந்ததாரர் ஒப்பந்த கால அளவு நிறைவடையும் தருவாயில் கட்டிட உரிமையாளருக்கு முறைப்படி முன்னறிவிப்புடன் கட்டிடத்தை காலி செய்து கொடுத்தல் அவசியம்.